பிரபல வில்லன் நடிகரை விவாகரத்து செய்த மனைவி..!!

மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த மாந்திரீகம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் விநாயகன். தமிழில் இவர் விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். தனுஷ் நடித்த மரியான் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகராக உள்ளார் விநாயகன். இவர் தமிழில் இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போது, இதுவரைக்கும் நான் பத்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பெண்களின் சம்மதத்துடன் தான் அப்படி செய்திருக்கிறேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். விநாயகன் சொன்ன இந்த கருத்து மலையாள திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
விநாயகனின் இந்த பேச்சு தான் அவரது குடும்பத்திலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் அவர் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார் . அந்த விவகாரத்திற்கு பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் . இந்த நிலையில் தற்போது தனது மனைவி பபிதாவை விவகாரத்து செய்து பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார் விநாயகன்.