1. Home
  2. தமிழ்நாடு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? உருளை கிழங்கில் வீடு ?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? உருளை கிழங்கில் வீடு ?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு மக்களை குடியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் பயிரிடுவது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டு விட்டன. முதலாவதாக செவ்வாய் கிரக தட்ப வெப்ப நிலையில் பூமியில் உருளைக்கிழங்கு பயிரிட்டு சோதனை நடத்தப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? உருளை கிழங்கில் வீடு ?

அதற்காக ஒரு மிகப்பெரிய ஆய்வுநிலையம் அமைக்கப்பட்டு அதில் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று மண்ணின் தன்மை மாற்றப்பட்டுள்ளது. இந்த உருளைக் கிழங்கு செய்கை தொடர்பான பரிசோதனையை சர்வதேச உருளைக்கிழங்கு மையம் பெருநாட்டிலும், அமெரிக்காவின் நாசா மையத்திலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட உருளைக்கிழங்கு பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் என்ற உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்டு கலவையை உருவாக்கியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? உருளை கிழங்கில் வீடு ?

இதனுடன் விண்வெளித் தூசு, உப்பு மற்றும் உருளைக்கிழங்கின் மாவுச்சத்து போன்ற பொருட்களை இணைத்து வீடு கட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கலவை 32 மெகாபாஸ்கல்ஸ் என்ற அளவைக் கொண்ட வலிமையுடன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Trending News

Latest News

You May Like