1. Home
  2. தமிழ்நாடு

இனி சென்னை சாலையோரங்களில் வாகனம் நிறுத்தினால் கட்டணம்..!!


சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியில் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்து, அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் பார்த்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், காலப்பேக்கில் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தினால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை நிறுத்த நடைமுறையில் உள்ள சிக்கலை தீர்க்க ‘பிரத்யேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம்’ என்ற பிரிவு உருவாக்கப்படும். முக்கியமான வணிக பகுதிகள், சாலை யோரங்களில் வாகனம் நிறுத்துவோரிடம் இருந்து 3 மண்டலங்களில் தனியார் நிறுவனம் வாயிலாக தினசரி 1.20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, எஞ்சியுள்ள 12 மண்டலங்களிலும் பொது-தனியார் கூட்டு முறையில், சாலையோரம் வாகனம் நிறுத்துவோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

Trending News

Latest News

You May Like