ஸ்ட்ரெச்சர் இல்லாததால் போர்வையில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்!!
அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் முதியவர் ஒருவர் போர்வையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜெயரோக்யா அரசு மருத்துவமனை மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது. ஆனால் 1000 படுக்கைகள் உள்ள இந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், ஸ்ரீகிஷன் ஓஜா (65) என்ற முதியவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை விபத்து காய பிரிவுக்கு கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அந்த முதியவரை அங்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாத நிலையில், அவரோடு அந்த அவரின் மருமகள் ஒரு பெட்ஷீட்டைக் கொண்டு வந்து அவரை இழுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அங்கிருந்தவர்கள் இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலானது. அதில் பதிவிட்ட பலர் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். 400 கோடியில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட இந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கூட இல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in