விரைவில் முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை..!!
மக்களைத் தேடி மேயர் என்ற புதிய முயற்சியை சென்னை மேயர் ஆர். பிரியா அறிவித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை வடக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வருவாய் மாவட்ட (RDC) அலுவலகங்களில் சென்னை மேயர் ஒவ்வொரு மாதமும் கலந்துகொண்டு அந்தந்த வருவாய் மாவட்டத்தில் குடியிருப்போரின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.
பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவை அமைக்க முடிவு.
பொது-தனியார்-கூட்டாண்மை முறையில், 1,2,3,4,5,6,7,11,12,13,14,15 மண்டலங்களில் சாலையோர பார்க்கிங் அமைக்கப்படும்.
நகரின் முக்கிய பொது இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை உறுதி செய்ய GCC மற்றும் CMDA இணைந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000 வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மேலும், 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று JEE, CLAT, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும்.
2023 - 24ம் நிதி ஆண்டு முதல் மாமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் போது, உயிரிழக்கும் உறுப்பினர்களுக்கு, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாக உயர்வு.
முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை முன்பதிவு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ தொலைவிற்கு ரூ. 55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு புதிய வடிவமைப்புடன் சீருடைகள் வழங்கப்படும்.
மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு.
11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை.
சென்னை பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.