லேசா லேசா பட நடிகர் காலமானார்..!!
1972ஆம் ஆண்டு 'நிருதாசாலா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் இன்னொசென்ட்.'அக்கரே நின்னொரு மாறன்', 'காந்திநகர் 2வது தெரு', 'உன்னிகளே ஒரு கதை பாராயம்', 'நாடோடிக்கட்டு', 'முகுந்தெட்ட சுமித்ரா விளக்கு', 'வடக்குநோக்கியந்திரம்', 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்', 'பெருவண்ணாபுரத்தின் காதல் காட்சிகள்', 'மழலைகளின் நடிப்பு', போன்ற 750 படங்களுக்கு மேல் நடித்தார். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். 'லேசா லேசா', 'நான் அவளை சந்தித்தபோது' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடியை சேர்ந்த இவர், அதே ஊரில் 1979ஆம் ஆண்டு முனிசிபல் வார்டு கவுன்சிலராகவும், 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுயேச்சையாக நின்று எம்.பி.,யாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் இயங்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், 2015 ஆம் ஆண்டில், அவர் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக அறிவித்தார். 'ஸ்மைல் இன் தி கேன்சர் வார்டு' என்ற தலைப்பில் அவர் நோயுடன் நடந்திய போரை புத்தமாக எழுதினார்.
புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகர் இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 75 வயதான அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லேக்ஷோர் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், "இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் எங்கள் கவனிப்பிலும் சிகிச்சையிலும் இருந்தார். கோவிட் தொடர்பான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவை அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன" என அவரது உயிரிழந்ததை உறுதிசெய்தது.