1. Home
  2. தமிழ்நாடு

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!!

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!!

சென்னை மாநகராட்சிக்கு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு செய்த நிலையில், இரண்டாவது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரிப்பன் மாளிகை மாமன்ற அரங்கில் காலை 10 மணிக்கு மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசிக்க உள்ளார். 2022-23 நிதி ஆண்டில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்ததால் அறிவுப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் எழுபதற்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!!

குறிப்பாக புறநகர் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து மாநகராட்சியின் வசம் கொண்டு வரப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்களும்,சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய சாலை வசதிகள், புதிய பொது கழிவறைகள் கட்டுவது, சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை வசதிகள் மேம்படுத்துதல், மழைநீர்வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்துதல், மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு புதிய திட்டங்கள் போன்றவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மாநகராட்சி மண்டலங்களை விரிவுபடுத்துவதற்கான திட்டமிடல், துறை ரீதியாக உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது போன்ற நிர்வாக ரீதியான அறிவிப்புகளுக்கும் வாய்ப்புகள் உள்ளதென மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த ஒருவருடத்தில் மாநகராட்சியின் நிதி ஆதாரமாக உள்ள சொத்துவரி தொழில் வரி மற்றும் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த நீண்டகால வாடகைகள் போன்றவை வசூலிக்கப்பட்டுள்ளதால் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,சென்னை மாநகராட்சியின் 2022-23ல் 770 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 2023-24ல் குறையக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like