ராகுல்கந்தி தகுதி நீக்கம் குறித்து திருச்சி எம்.பி சிவா கருத்து…!
சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் “திராவிட மாடல் 63” “அலைபோல் உழைப்பு மலை போல் உயர்வு ” என்ற தலைப்பின் கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி எம்பி சிவா திமுக அரசு நிகழ்த்திய சாதனைகள் குறித்து மக்களிடையே பேசினார். அப்போது லலித்மோடி, நீரஜ் மோடி ஆகிய இருவரைப் பற்றி ராகுல் காந்தி பேசியதை தன்னை குறித்து பேசுவதாக நினைத்துகொண்டு அவரை பதவி நீக்கம் செய்துள்ளது மட்டுமல்லாது இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது ஜனநாயத்திற்கு எதிரானது என்றும் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பில் மேல் முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு வாய்ப்புகள் உள்ளபடியால் நிச்சயம் அவர் எதிர்த்து மேல் முறையீடு செய்வார், எனினும் இந்த தீர்ப்பு சரியானதா? தவறானதா ? என்பதே முக்கியம். கடந்த ஆட்சி காலங்களில் எத்தனையோ உணர்ச்சிபூர்வமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியில் அது போல் நடக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் பிரதமர் நாடாளுமன்ற அவைக்கே வருவது இல்லை. அவர் முதலமைச்சராக இருந்த போதே முக்கிய நாட்களைத் தவிர அவைக்கு வந்ததில்லை. ராகுல்காந்தியின் செல்வாக்கு மக்களிடத்தில் அதிகமாகியுள்ளதை பொறுக்காமல் இப்படியான ஜனநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு இது சாதகம் அல்ல மாறாக பாதகமே.
இதுவரை அவருக்கு குரல் கொடுக்காதவர்கள் கூட பரிந்து பேசி வருவது அவரது செல்வாக்கை பிரதிப்பதாக உள்ளது என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் ‘ராகுல் காந்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு மட்டுமே இது ஒன்றும் பொதுநல வழக்கு அல்ல. குறிப்பிட்ட சிலர் தொடுக்கும் வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இப்போது தீர்ப்பு ஓராண்டு தடை ஆணை கேட்ட பிறகும் கூட அதை ரத்து செய்து இப்போது வழக்கை விரைவுபடுத்தியிருப்பது ஜனநாயத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி , நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். sகூட்டம் அம்பேத்கார் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்டிஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.