இனி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் இப்படி தான் வசூலிக்கப்படும்..!!
நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிளும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை கண்மூடித்தனமாக உயர்த்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் தற்போதைய சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும் என்றும் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.