1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி..!!

ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி..!!

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டரில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. முக்கியமாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் நிகழ்த்திய ஆட்குறைப்பு நடவடிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையில் ட்விட்டரின் முக்கிய நபர்களும் சிக்கினர்.

இதைத்தொடர்ந்து, ட்விட்டரின் முன்னாள் சிஇஒ-வான ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக சமூகவலைதளச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவேன் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது, அவர் கூறியதன்படி ‘ப்ளூஸ்கை (Bluesky)’ என்ற செயலியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி..!!

இந்த செயலியானது ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிற லோகோவை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக ஆப்பிள் இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ட்விட்டருக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த ‘Bluesky’ செயலியில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like