இந்த கொடுமைக்கு தீர்வு எப்போ வருமோ ?
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக மீண்டும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியரான ரவி சங்கர் என்பவர் இன்று (மார்ச் 25) தற்கொலை செய்து கொண்டார். அதிக தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்டு கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.