கொடூரத்தின் உச்சம்..!! மரத்தில் கட்டப்பட்ட காதலன்... காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை..!!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவர் கடந்த 22-ம் தேதி மாலை வேளையில் தனது காதலனுடன் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வாக்கிங் சென்றுள்ளார். இருவரும் தனியாக நடந்து கொண்டே பேசி சென்ற நிலையில், அப்பகுதியில் இரு இளைஞர்கள் வந்து இடைமறித்துள்ளனர். காதலர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மிரட்டிய நிலையில், காதலன் அவர்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.
உடனடியாக கையில் இருந்த காலி பீர் பாட்டிலால் காதலனை தாக்கிய அந்த இரு வாலிபர்கள், காதலனின் ஆடைகளை உருவி அதைக் கொண்டு அவரை மரத்தில் கட்டிப் போட்டனர். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை தனியாக தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதை வெளியே தெரிவித்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து தப்பியோடிய பின், இளம் பெண் தனது வீட்டிற்கு சென்ற நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த காதலனை மீட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் விரார் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வயதை போலீசார் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட இருவரிடமும் வாக்குமூலம் பெற்ற போலீசார் குற்ற செயலில் ஈடுபட்ட இரு வாலிபர்களையும் சிறையில் அடைத்துள்ளனர்.