1. Home
  2. சினிமா

பாம்பே ஜெயஸ்ரீயின் தற்போதைய உடல்நிலை : அவரது உறவினர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பாம்பே ஜெயஸ்ரீயின் தற்போதைய உடல்நிலை : அவரது உறவினர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பிரபல கர்நாடக இசைப் பாடகி, பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, நேற்று மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மொழிகளில் பாடி ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார். பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற ‘மின்னல்கள் கூத்தாடும்’ பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் ‘பார்த்த முதல் நாளே’ பாடல், காக்க காக்க படத்தில் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ போன்ற பாடல்கள் இவரது ஹிட் லிஸ்டில் உள்ளன.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுயநினைவை இழந்ததாக தெரிவித்துள்ளனர். பரிசோதனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. மூளைச்சாவு அடைந்த நிலையில் இருப்பதாகவும், பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவரது உறவினர்கள், இதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்..


Trending News

Latest News

You May Like