1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமானது 18,000 ரூபாயாக உள்ள நிலையில், அதனை 26,000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல், 38 சதவீதமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபடி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

எனவே அகவிலைப்படி 42 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுதோறும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் புதிய திருத்தும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி!!

இந்த மாற்றம் தற்போது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1, 2023 முதல் கணக்கீடு கொள்ளப்பட்டு அமலுக்கு வரும்.

விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படு வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர். இதனை மத்திய அரசு 42 சதவீதமாக உயர்த்த உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like