அதிர்ச்சி! விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!!
படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விபத்தில் சிக்கியதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அக்ஷய்குமார் படே மியான், சோட்டே மியான் என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. அவர் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார்.
மற்றொரு ஹீரோவான டைகர் ஷெராஃப் உடன் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது விபத்து ஏற்பட்டது. இதில் அக்ஷய் குமாருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சில நாட்கள் ஆக்ஷன் காட்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷய் குமார் காயம் அடைந்ததால் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
newstm.in