நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்த மெடிக்கல் கடைக்காரர்!!
மருந்து கடை நடத்தி வரும் ஒருவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் கேஜூரி அருகே ஜிகிர்சாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னா குப்தா என்பவருக்கு ஹைட்ரோசெல் எனப்படும் விரைவீக்கம் பாதிப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது.
அவர் மருந்துக்கடை வைத்திருக்கும் ரஹ்மான் என்பவரிடம் மருந்துகள் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், உடல் நலம் சீராக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று மருந்துக்கடைக்காரர் ரஹ்மான் கூறியுள்ளார்.
மேலும், தாம் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து முன்னா குப்தாவும் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து மருந்துக் கடையில் முன்னாவுக்கு, ரஹ்மான் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதையடுத்து அறுவை சிகிச்சை முடிந்த அன்று மாலையே உடல் நிலை பாதிக்கப்பட்டு முன்னா குப்தா மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னா குப்தாவின் மகன் மருந்து கடை ஓனர் ரஹ்மான் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சட்ட விதிகளை மீறி அறுவை சிகிச்சை செய்த ரஹ்மானை காவல்துறை கைது செய்துள்ளது.
newstm.in