1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!

தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.

இந்நிலையில், இன்று 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

22-ம் தேதி ரமலான் மாதபிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) அன்று ரமலான் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

புனித ரம்ஜான் மாதத்தில் மக்கள் ஏன் நோன்பு இருக்கிறார்கள்?: ரமலான் மாதத்தில் நோன்பு ஒரு வழிபாடாகவே பார்க்கப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். இதோடு இந்த நாள்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் தலையாயக் கடமையாகும். இந்த உதவியைத் தான் சகத் என்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி இந்த நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், திருக்குரான் அனைத்தையும் வாசிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையையும் இருக்க வேண்டும். இதோடு இந்த நாள்களில் கெட்ட பழக்கங்களையும் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும் என நம்பப்படுகிறது


Trending News

Latest News

You May Like