1. Home
  2. தமிழ்நாடு

இனி பொது இடங்களில் முககவசம் கட்டாயம் - அரசு அறிவிப்பு..!!

இனி பொது இடங்களில் முககவசம் கட்டாயம் - அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால் ஒருவித மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. 138 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதன்படி நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,30,813ஆக உயர்ந்துள்ளது.

இனி பொது இடங்களில் முககவசம் கட்டாயம் - அரசு அறிவிப்பு..!!

இதற்கிடையே இன்புளூயன்சா வைரசும் ஒருபக்கம் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட 6 மாநில அரசுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உஷார்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் ஓரே நாளில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, ICU மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை போதிய இருப்பு வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கேரள மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட அவர், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like