1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? மாஸ் அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்!!

இது தெரியுமா ? மாஸ் அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் அப் குரூப்களின் அட்மின்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்தார். இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் சானலில் அவர் வெளியிட்டார். இனி வரும் வாரங்களில் உலகெங்கிலும் இந்த வசதிகள் அமலுக்கு வர உள்ளன என்றார்.


இது தெரியுமா ? மாஸ் அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்!!

இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ப்ராட்காஸ்ட் குரூப்களை நீங்கள் பார்வையிடும்போது அங்கே அப்டேட்டுகளை நீங்கள் பார்க்கலாம். குரூப்களின் எண்ணிக்கையை பெரிதாக்குவது மற்றும் குழுவில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை டெலிட் செய்வது போன்ற வசதிகள் அட்மின்களுக்கு கடந்த சில மாதங்களில் வழங்கப்பட்டன. குரூப்கள் வாட்ஸ்அப் செயலின் அத்தியாவசிய பகுதியாக இருக்கின்றன. இந்த நிலையில், குழுவின் உள்ளவர்களின் பயன்பாட்டிற்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இது அட்மின்களின் நிர்வாகப் பணிகளுக்கு உதவியாக அமையும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குரூப்களில் இனி யார் சேர முடியும், யார் சேர இயலாது என்பதை வாட்ஸ்அப் அட்மின்கள் தீர்மானிக்க முடியும். மிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்கள், ரகசியத்தன்மை வாய்ந்த விஷயங்கள் நிறைந்த குரூப்களில் இந்த டூலின் வசதி இன்றியமையாததாக இருக்கும். யார் உறுப்பினராக வர இயலும், யார் வர இயலாது என்பதை அட்மின்கள் மிக எளிதாக தீர்மானிக்க முடியும்.

தற்போது ஒரு காண்டாக்ட் பெயரை நீங்கள் எளிமையாக தேர்வு செய்து, உங்கள் இருவருக்கும் பொதுவான குரூப்கள் என்னென்ன உள்ளன என்பதை எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம். தகவல்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் குரூப்களை எளிமையாக நினைவுகூர விரும்பும்போது இது உதவியாக இருக்கும். மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு வசதிகளுமே அடுத்தடுத்த வாரங்களில் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ் அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இது தெரியுமா ? மாஸ் அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்!!

வாட்ஸ்அப்-பில் உங்கள் நண்பருடைய சாட்டில் 4, 5 மாதங்களுக்கு முன்னால் அவர் அனுப்பிய செய்தியை படிக்க விரும்பினால் நீங்கள் தொடர்ந்து கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரியாக உங்கள் விருப்பத்திற்குரிய தேதி வந்ததும் அந்த செய்தியை நீங்கள் தேடிப் படிக்க வேண்டும்.

ஆனால், ஐஃபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அப்டேட்டில், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேதி இடைவெளியில் பகிர்ந்து கொண்ட மெசேஜ்களை பில்டர் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் சாட் விண்டோவில் உள்ள ஃபுரொபைல் செக்‌ஷனுக்கு சென்று இந்த செட்டிங்க்ஸ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like