பிரபல கிடாரிஸ்ட் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!!
பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிடாரிஸ்ட் ஸ்டீவ் தொடக்க காலத்தில் ஆல்பங்களை வெளியிட்டு வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இவரை பீமா படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அதே போல் வாரணம் ஆயிரம் படத்தில் நெஞ்சுக்குள் பேய்திடும் மாமழை பாடலால் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு வாய்ப்புகள் குவிந்தது.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், டி.இமான், அனிருத் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
கடந்த 2015- வெளியான 'உப்பு கருவாடு' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தீம் பாடலுக்கும் கிட்டார் வாசித்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
மருத்துவமனையை அணுகியபோது, அவருக்கு மூளையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 43 வயதே ஆகும் கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in