1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகை கைது செய்யப்பட வாய்ப்பு!!

பிரபல நடிகை கைது செய்யப்பட வாய்ப்பு!!

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கினார்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆண் நண்பர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


பிரபல நடிகை கைது செய்யப்பட வாய்ப்பு!!

யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் யாஷிகா வேகமாக கார் ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது.

இதையடுத்து யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். யாஷிகா 129 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டி செல்லும்போது விபத்து நிகழ்ந்ததாக இ.சி.ஆர். சாலையில் உள்ள வேக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.


பிரபல நடிகை கைது செய்யப்பட வாய்ப்பு!!


இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாததால், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like