1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் தொடங்குகிறது ரமலான் நோன்பு!!

நாளை மறுநாள் தொடங்குகிறது ரமலான் நோன்பு!!

ரமலான் நோன்பு வரும் 24ஆம் தேதி தொடங்கும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் வானில் பிறை பார்த்து ரமலான் நோன்பு தொடங்கப்படும். இந்நிலையில் இம்முறைக்கான நோன்பு குறித்து தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நாளை மறுநாள் தொடங்குகிறது ரமலான் நோன்பு!!

அதில், ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29-ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 18-04-2023 செவ்வாய்க்கிழமை மற்றும் 19-04-2023 புதன்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like