1. Home
  2. தமிழ்நாடு

ஹோட்டலில் பாயா கேட்டு சண்டை போட்ட போலீஸ்காரர்கள்!!

ஹோட்டலில் பாயா கேட்டு சண்டை போட்ட போலீஸ்காரர்கள்!!

சென்னை திருவொற்றியூரில் ஹோட்டலில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கணக்கர் தெருவில் உள்ள ஹோட்டலுக்கு ஐந்து காவலர்கள் நேற்று இரவு சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள், கடை ஊழியர்களிடம் பரோட்டாவுக்கு பாயா கேட்டுள்ளனர்.

பாயா இல்லை என்றும், குருமா மட்டுமே இருப்பதாக ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆத்திரம் அடைந்த காவலர்கள் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும் தெரிகிறது.



காவலர்கள் ஹோட்டலில் ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஏட்டு கோட்டமுத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசார் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மீதமுள்ள 3 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like