1. Home
  2. சினிமா

யுகாதி வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை…!

யுகாதி வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை…!

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினமாக யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், யுகாதி என்ற பெயர் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இத்திருநாளுக்கு ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்த புத்தாண்டு உங்களுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை வழங்கட்டும், நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று யுகாதி வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.



Trending News

Latest News

You May Like