1. Home
  2. விளையாட்டு

வெல்லப்போவது யார் ? இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி..!!

வெல்லப்போவது யார் ? இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும். ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது. அதே நேரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட்டை போலவே ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like