1. Home
  2. தமிழ்நாடு

இன்று பங்குனி அமாவாசை : இதை மறக்காம செய்யுங்க..!!

இன்று பங்குனி அமாவாசை : இதை மறக்காம செய்யுங்க..!!

பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்த அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்றும் முன்னோர்கள் ஆசியோடு பல தடைகள் விலகும் மற்றும் கூறப்படுகிறது.சைத்ர அமாவாசை இன்று மார்ச் 21 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் சைத்ர அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பூதாதி அல்லது பூமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் கங்கை அல்லது மற்ற புண்ணிய நதிகளில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிகவும் முக்கியமானது. இதைச் செய்வதன் மூலம், தொழிலில் முன்னேற்றம் மற்றும் வேலையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறுக்காக ஏங்குபவர்கள், பங்குனி அமாவாசை அல்லது சைத்ர அமாவாசை தினத்தில் அரச மரத்தின் வேருக்கு தண்ணீர், கருப்பட்டி, பால், பார்லி ஆகியவற்றைக் கலந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, அவர்கள் அரச மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதைச் செய்வதன் மூலம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் வியாபாரத்தில் சரியாக முன்னேற்றம் இல்லாதவர்கள் இன்று அனுமானை வழிபாடு செய்தால் அனைத்து காரியங்களும் நன்றாக நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அரிசி, பால் மற்றும் வஸ்திர தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.இந்த பரிகாரத்தால் முன்னோர்களின் அதிருப்தி நீங்கி தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.சைத்ர அமாவாசை தினத்தில் முன்னோர்களை மகிழ்விப்பது மிகவும் முக்கியம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்

பித்ரா தோஷம் உள்ளவர்கள், சைத்ர அமாவாசை (2023) அன்று தங்கள் முன்னோர்களை வணங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இந்த நாளில் கறுப்பு எள்ளை தானம் செய்வதால் சனி பகவான் மகிழ்வதாகவும், பித்ரா தோஷம் நீங்குவதாகவும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குடும்பத்தில் பாசிட்டிவ் எனர்ஜி ஓட்டம் அதிகரித்து பொருளாதார பலம் வரும்.




Trending News

Latest News

You May Like