தலைநகரில் தொடரும் கொடூர கொலைகள்..!! துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்..!
டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து வருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல் பாகங்கள் தெரிந்த நிலையில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தியதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தலை எலும்புக்கூடான நிலையில் வெள்ளை பிளாஸ்டிக் பையில் இருந்துள்ளது.
தொடர்ந்து, உடல் பாகங்களைக் கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக எய்ம்ஸ் விபத்து மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு உடல் பாகங்கள் கைப்பற்றிய இடங்களில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார் என்பதைக் கண்டறியும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.