சூப்பர்! ரேஷனில் உணவு தானியம் வழங்கும் ஏடிஎம் எந்திரம்!!
பணம் எடுக்கும் ஏடிஎம் எந்திரம் போல், உணவு தானியங்கள் வழங்கும் ஏடிஎம் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள் வாங்கும் வழக்கத்தை மாற்றும் முயற்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கவே இத்தகைய நடவடிக்கை. ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த எந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 ரேஷன் தானிய ஏடிஎம் எந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. லக்னோவில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த எந்திரங்கள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை அடையளம் மூலம் சரிபார்ப்பு செய்த பின்னர், இந்த எந்திரங்கள் மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. லக்னோ மட்டுமல்லாது, வாரணாசி மற்றும் கோரக்பூர் பகுதிகளிலும் இந்த ரேஷன் ஏடிஎம் எந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற 7 உணவு தானிய ஏடிஎம்கள் செயல்படுகின்றன. 30 நொடிகளிலேயே தங்களின் பொருள்களை பெறுவதால் நேரம் வெகுவாக மிச்சமடைகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
newstm.in