அதிகரிக்கும் கொரோனா… சுகாதாரத்துறையின் முக்கிய அலர்ட்!!
கொரோனா பரவலை தடுக்க திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போன்றே நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்படாதவரை, ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
வீட்டுக்குள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது, வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூச்சுவிடுவதில் சிரமம், அதிகஅளவில் காய்ச்சல் அல்லது தீவிர இருமல் ஆகியவை 5 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மிதமான அல்லது தீவிர பாதிப்பு உள்ளவர்கள், 5 நாட்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
newstm.in