தலைமறைவாக இருந்த ஆபாச வீடியோ பாதிரியார் கைது!!
பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த கன்னியாகுமரி பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த மத போதகர் பெனடிக்ட் ஆன்டோ (29) கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின.
இந்நிலையில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார். அவரை பிடிக்க காவல்துறை 2 தனிப்படை அமைத்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை போலீசார் இன்று கைது செய்தனர்.
நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
newstm.in