தாலிபான்களின் ஆதிக்கத்தால் வேலையிழந்து வரும் ஊடகவியலாளர்கள் …!
ஆப்கானிஸ்தானில் தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், பல காரணங்களுக்காக 53 சதவீத ஊடகவியலாளர்கள் வேலையிழந்து உள்ளதாகவும், 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊடக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். ஊடக சமூகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.