1. Home
  2. தமிழ்நாடு

மரியோ மொலினாவை கவுரவப்படுத்திய கூகுள்…! இவர் யாரு தெரியுமா ?

மரியோ மொலினாவை கவுரவப்படுத்திய கூகுள்…! இவர் யாரு தெரியுமா ?

நேற்று கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ளவர் மரியோ மொலினா, இவர் மெக்சிகோவைச் சேர்ந்த வேதியியல் நிபுணர் மற்றும் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர். ஓசோன் மண்டலத்தில் உள்ள துளை குறித்து கண்டுபிடித்தவர்.

க்ளோரோப்ளுரோகார்பன் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்த இவரின் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மெக்சிகோவில் இருந்து நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியலாளர்.

இவர், கலிபோர்னியா பல்க்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருந்துள்ளார். மேலும் மெக்சிகோ அதிபருக்கு இவர் சுற்றுச்சூழல் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 1943ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி பிறந்த இவர், 2020ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் நினைவுகொள்ள வேண்டிய முக்கிய நபர் மரியோ மொலினா, இவர்தான் இன்றைய கூகுள் டூடுலை அலங்கரிக்கும் முக்கியமான நபர்.

Trending News

Latest News

You May Like