ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி!!
மதுபோதையில் சாலையில் தகராறில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இரவு நேரத்தில் பெண்கள் சிலர் மதுபோதையில் வாகனங்களை மறித்தும் தகராறு செய்துகொண்டிருந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்ட பெண்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். போலீஸ் வருவதை கண்ட பெண்களில் 3 பேர் அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றனர்.
ரகளையில் ஈடுபட்டிருந்த மற்ற 3 மூன்று இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ரகளையில் ஈடுப்பட்ட அனைத்து பெண்களும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மதுபோதையில் தகராறு செய்த இளம்பெண்களில் ஒருவர், தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சோனாலி என்ற 23 வயது இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காதலனுடன் மதுஅருந்தியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, சோனாலி, 4-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கை, கால்கள், இடுப்பில் எலும்புகள் முறிந்து அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in