புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ!!

புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ!!
X

வெளிநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசியலில் தெர்மோகால் மூலம் பிரபலமானவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவர் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பார். அதே போல் எதிர்க்கட்சிகள் குறித்து சலைக்காமல் கருத்து கூறுபவர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் வைகை அணை மீது தெர்மோகால் போட்டதால், விஞ்ஞானி என்று நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டார். இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் புலிவாலை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it