இப்போது கடன்காரனாக இருக்கிறேன் – அண்ணாமலை!!

போலீஸ் வேலை பார்த்த போது சிறுக சிறுக சேர்ந்த பணத்தை எல்லாம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டதாக கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது கடனாளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது, நேர்மையான அரசிலுக்கு தமிழ்நாடு மக்கள் காத்து இருக்கின்றனர் என்று தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.
நேர்மையாக, பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறிய அவர், இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற்றம் நடக்காது என்றார்.
அதை கட்சிக்குள்ளும் பேச தொடங்கிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். போலீஸ் வேலையில் இருந்த போது 9 ஆண்டுகள் சம்பாதித்த எல்லா பணமும் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகிவிட்டது என்றும், தற்போது கடனாளியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தல் என்றால் 80 கோடி ரூபாயில் இருந்து 120 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்யவேண்டுமென்பது பொதுவான கணக்கு. எல்லா கட்சியும் பணம் கொடுக்கிறது என்று நான் கூறவில்லை.
ஆனால் இதை செய்துவிட்டு தூய்மையான அரசியல் என்று நீங்கள் பேச முடியாது. தூய்மையான அரசியலுக்கு தமிழ்நாடு மக்கள் தயாராக உள்ளனர் என்பது உள்மனதில் உள்ளது என்று அவர் கூறினார்.
newstm.in