உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலாந்து…!

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்கிரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையே விமானங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் 4 போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கும் அமைப்பில் முதல் நாடாக போலந்து மாறி உள்ளது.
Next Story