எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்..!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்..!!
X

திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் அல்லக்கைகளின் எடுபிடி எடப்பாடியே, அதிமுகவை அழிக்கும் துரோகி பழனிச்சாமியே, கட்சியை அழிக்காமல் கழகத்தை விட்டு வெளியேறு இல்லாவிடில் தொண்டர்களால் தூக்கி வீசப்படுவாய் என அச்சிடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகர் ஒன்றிய கழகத் தொண்டர்கள் இந்த போஸ்டரை அடித்துள்ளனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் என்ற வாசகங்கள் அடங்கிய வால் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல் பேருந்து நிலையம், மெயின் ரோடு, பழனி ரோடு, மெங்கல்ஸ் ரோடு, நாகல் நகர், ரயில்வே நிலையம் உட்பட நகரில் அனைத்து பகுதிகளிலும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் திண்டுக்கல் நகரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Next Story
Share it