வரலாறு காணாத உயர்வை தொட்ட தங்கம் விலை..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

வரலாறு காணாத உயர்வை தொட்ட தங்கம் விலை..!!  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
X

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 110 ரூபாய் உயர்ந்து, ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,464-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த 10ம் தேதி விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 18ம் தேதி சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் உயர்ந்து, ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it