பரபரப்பு! எஸ்.ஐ.யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி!!

பரபரப்பு! எஸ்.ஐ.யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி!!
X

வாகனத்தின் ஆவணங்களை சரி பார்க்க முயன்ற எஸ்.ஐ.யை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் நேற்று இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார்.

அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் திட்டி கொண்டனர். இந்த நிலையில் வெங்கட துர்கா பிரசாத் இளநீர் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னாராவை வெட்டினார்.இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சின்னராவை அவர் மீண்டும் மீண்டும் வெட்டினார். தகவல் அறிந்து வந்த காக்கிநாடா போலீசார் சின்னராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட வெங்கட துர்கா பிரசாத்தை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it