அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!
X

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. தனியாக இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று அவர் பேசியதாகவும் தெரிகிறது.ஏற்கனவே, கூட்டணி கட்சிகளான அதிமுக – பாஜக இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தற்போது அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக தரப்பில் அண்ணாமலை பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அண்ணாமலை அவ்வாறு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it