டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்!!

டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்!!
X

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக இளைஞர்கள் நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கேலரிக்கு கலைஞர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் கேலரியை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று வழங்கப்பட உள்ளது.

பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 என்று நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்து வரும் நிலையில், முன்கூட்டியே டிக்கெட் விநியோகத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it