1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் டிக்கெட்டுகள் விநியோகம்!!

இன்று முதல் டிக்கெட்டுகள் விநியோகம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விநியோகம் இன்று நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கேலரிக்கு கலைஞர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் கேலரியை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


இன்று முதல் டிக்கெட்டுகள் விநியோகம்!!

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று வழங்கப்பட உள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 என்று நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like