1. Home
  2. தமிழ்நாடு

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர் சட்டப்போராட்டம், அதைத் தொடர்ந்து வந்த தீர்ப்புகள் என அதிமுக பரபரப்பாகவே காணப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார். ஆனால் ஓபிஎஸ் அணியினர் இது தற்காலிக வெற்றி என்கின்றனர்.


இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!!


இந்நிலையில்தான் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பமுள்ளோர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 21ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 26ஆம் தேதி நடைபெறுகிறது.


இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!!


தேர்தலில் பதிவான வாக்குகள் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like