மச்சினியை விருந்துக்கு வரவழைத்து அக்கா கணவர் செய்த அதிர்ச்சி செயல்.!!

புதியதாக திருமணம் செய்துகொண்ட மச்சினி மற்றும் அவருடைய கணவர் விருந்து சாப்பிடுவதற்கு தன் வீட்டுக்கு வந்ததும், அவர்களுடைய வீட்டுக்கு சென்று நகைகளை திருடிய அக்கா கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நரேந்திரனுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கே.கே. நகரிலுள்ள மனைவியின் அக்கா வீட்டுக்கு குடும்பத்துடன் விருந்துக்கு சென்றுள்ளார். சாப்பிட்டு முடிந்ததும் நரேந்திரனும், அவருடைய மனைவியும் அங்கேயே தங்கியுள்ளனர்.
அப்போது மயிலாப்பூரில் வேலை இருப்பதாக கூறி நரேந்திரன் வீட்டு சாவியை, மனைவியின் அக்கா கணவர் சுரேஷ் கேட்டுள்ளார். சொந்தக்காரர் தானே என்று நினைத்து நரேந்திரனும் வீட்டுச் சாவியை கொடுத்து மயிலாப்பூருக்கு வழி அனுப்பிவைத்துள்ளார்.
அடுத்தநாள் நரேந்திரன் வீடு திரும்பிய போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் நகைகள், தாலிச்சரடு, ஜிமிக்கி உள்ளிட்டவை காணவில்லை. உடனடியாக அவர் மயிலாப்பூரி காவல்துறைக்கு புகார் அளித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் நரேந்திரனின் உறவினர் சுரேஷ் அவருடைய வீட்டுக்குள் சென்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை சுரேஷின் செல்போனை டிராக் செய்த போது, அவர் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற காவல்துறை, சுரேஷ் இருக்கும் இடத்தை கண்டறிந்து வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, அவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கான நோக்கம் என்ன? என்கிற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.