1. Home
  2. தமிழ்நாடு

இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

தமிழகத்தில் தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 13-ம் பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு மையம் வாரியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலை எடுத்து அதற்கான காரணத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணத்தை கண்டறிவது தான் மிகவும் முக்கியமானது.

பெற்றோர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்வுக்கு வராதவர்களை நாங்கள் அழைக்க வரும் போது, பெற்றோர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். மாவட்ட வாரியாக காரணத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

மார்ச் 24ம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஜூன் தேர்வில் இவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடங்க உள்ள 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதினார்கள் என்ற நிலையை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இது முடிந்த பின்னர் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறறும். இதன்படி ஏப்ரல் 24 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும்" என்றார்.

Trending News

Latest News

You May Like