தொடர்ந்து முதலிடத்தில் இந்திய வீரர் அஸ்வின்!

தொடர்ந்து முதலிடத்தில் இந்திய வீரர் அஸ்வின்!
X

கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுடைய தரவரிசை பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் குவித்த விராட் கோலி விராட் கோலி 8 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் லபிசேன் தொடர்ந்து முதல் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 9வது இடத்திலும் , கேப்டன் ரோஹித் சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.



பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்தில் உள்ளார்.


Next Story
Share it