திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகன்… இதெல்லாம் ஒரு காரணமா?
உத்தரப்பிரதேசத்தில் மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்திய நிலையில், அவர்கூறிய காரணத்தை கேட்டு மணப்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பகன்வா கிராமத்தைச் சேர்ந்த சோனு என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் திடீரென திருமணத்தை நிறுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணம் கேட்டு மணமகளும், அவரது வீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
12ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக, மணமகள் வீட்டார் கவலை தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், வரதட்சணையைக் கொடுக்காத காரணத்தால்தான் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதாக மணப்பெண் தெரிவித்தார். திருமணத்திற்காக ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் மணமகனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மணமகன் வீட்டார் மறுத்துள்ளனர். இருவீட்டாருக்கும் சமாதானம் செய்து வைக்க போலீஸார் எவ்வளவு முயன்றும் பலனில்லை. இதனால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.
newstm.in