இதற்காக மாதம் ஒரு லட்சம் செலவு செய்யும் பிரபல நடிகை!!

இதற்காக மாதம் ஒரு லட்சம் செலவு செய்யும் பிரபல நடிகை!!
X

படத்திற்கு ஏற்ப தனது உணவு முறை மாறுவதாக பிரபல தனுஷ் பட நடிகை கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக திகழ்கிறார். ஆடுகளம் படத்தில் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், தனது கதை தேர்வு மூலம் தனித்துவ நடிகையாக உள்ளார்.



பாலிவுட்டில் இவர் பெண்ணை மையப்படுத்திய கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். பிங்க் உள்ளிட்ட படங்களில் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார் டாப்ஸி. இந்நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




அதில், டயட்டீஷியனுக்கு மாதம் ஒரு லட்சம் செலவு செய்வதாகவும், இதுகுறித்து அப்பாவுக்கு தெரிந்தால் அவர் திட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார். தன் தந்தை மிகவும் கஞ்சத்தனமானவர் என்று கூறியுள்ள டாப்ஸி, வாழ்நாள் முழுவதும் பணம் சேமித்த பிறகும், அவர் தனக்காக செலவு செய்வதில்லை என்றார்.

டயட்டீஷியனுக்கு மாதம் ஒரு லட்சம் செலவு செய்வது தன்னுடைய சினிமாத்துறை வேலைக்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it