ஆதார் அட்டை புதுப்பித்துக்கொள்ள ஓர் வாய்ப்பு..!!

ஆதார் அட்டை புதுப்பித்துக்கொள்ள ஓர் வாய்ப்பு..!!
X

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்கிற சூழல் நிலவுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே முக்கிய ஆவணமாகக் கருதப்பட்டது. அதன்பிறகு கடந்த 2009ம் ஆண்டு 12 இலக்க எண் கொண்ட ஆதாரை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கன் கருவி, கைரேகைகள் , புகைப்படம் என அனைத்தும் இந்த ஆதாரில் அடங்கியுள்ளது. சிம் கார்டு வாங்குவது தொடங்கி கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்க, பான் கார்டு பெற, வேலைகளில் சேர என அனைத்திற்கும் ஆதார் கேட்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், இந்த சேவை மார்ச் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் . இ-சேவை அல்லது ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும என்று தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. பயனாளர்கள் 'myaadhaar.uidai.gov.in' எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருக்கிறது.

Next Story
Share it