கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா வாரிசு பட நடிகை ..?

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய காதல் சர்ச்சைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. முதலில் ரக்ஷித் ஷெட்டி என்கிற கன்னட நடிகரை காதலித்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா தொடர்ச்சியாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வந்தனர். இந்த நிலையில் 26 வயதுடைய ராஷ்மிகா 23 வயதுடைய கிரிக்கெட் பிரபலத்திற்கு ரூட்டு போடுவதாக தெரிகிறது. இதை அவரே சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கண்ணடித்து காண்பித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசக்கூடியவார். மனதில் பட்டதை தைரியமாக பொது மேடையிலேயே பேசும் குணம் உடையவர்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எனக்கு கிரிக்கெட் பிளேயர் சுமன் கில் மேல் ஒரு பெரிய க்ரஷ் என்று பேசினார். சுமன் கில் ஏற்கனவே சச்சினின் மகளை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் பரவின. சுப்மன் கில் ஸ்டேடியத்தில் இறங்கினாலே சாரா சாரா என கத்தி வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் சுப்மன் கில்லுடன் அடிபட்டு வருகிறது.
மேலும் பாலிவுட்டிற்கு சென்ற பிறகு விஜய் தேவரகொண்டாவை கழட்டிவிட்டு, ராஷ்மிகா பிரபல கிரிக்கெட் பிளேயரை பிடித்து விட்டார் போல என்று சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.